கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபிர் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபிர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை இவ் வருடமும் பாடசாலையின் அதிபர் எம்.ஜே.என் பாஹிமா தலைமையில் இன்று(08) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தரும் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பாலர் பாடசாலைகளுக்கான பொறுப்பு உத்தியோகத்தருமான எச்.எம் நிப்ராஸ் , கற்பிட்டி புநுப்பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி மிக்தாத் மற்றும் கற்பிட்டியின் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான ஏ.ஆர். எம் முஸம்மில் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
சிறுவர்களின் அறிவு ஆற்றலை மேம்படுத்தி செயற்பாட்டு திறன்மிக்கதாக கொண்டு வரும் நோக்கோடு வியாபாரம் மற்றும் பொருளாதாரம் ரீதியாக சிறார்களை செயற்பட தூண்டுதலை நோக்காக கொண்டு இச் சிறுவர் சந்தை வருடா வருடம் கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபிர் இஸ்லாமிய பாலர் பாடசாலையில் நடைபெற்று வருவதாகவும் இதற்கான பூரண ஒத்துழைப்புக்களை பெற்றோர்களுடன் இணைந்து எமது பாடசாலையின் ஆசிரியர்களான ஏ.சீ யஸினத் பானு, எம்.ஐ ஆகிலா பானு, எம்.எப் இமாரா, எம்.ஏ.எப் ஹனா, எம்.ஆர்.எப் றபா ஆகியோர் வழங்கி வருகின்றதனையும் அதிபர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
No comments