அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநர் நஸீர் அஹமட் கரிசனை
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் எம்.யூ.எம் சனூன்)
வடமேல் மாகாணத்தில் ஆசிரிய சேவையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளில் ஆசிரிய சேவையில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் தற்போதைய நிலையில் உடனடியாக ஆசிரிய சேவையில் உள்ளீர்க்கக் கூடிய வகையில் கடந்த காலங்களில் நடைபெற்ற போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கவும் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றாத உத்தியோகத்தர்கள் மற்றும் 35 வயது வரம்பைக் கடந்தவர்கள் தொடர்பில் சகல மாகாண ஆளுநர்களுடன் இணைந்து மத்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவம் ஆளுநர் தொடர்ந்தும் உறுதியளித்துள்ளார்.
No comments