மானிய விலையில் தென்னை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
நாடளாவிய ரீதியில் தென்னை பயிர் செய்கை சபையினால் மானிய விலையில் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வீட்டு தோட்டங்கள் மற்றும் பெருந்தோட்டங்களில் நாட்டுவதற்கும் இந்த தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புத்தளம் மாவட்டத்திலும் சகல தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மானிய அடிப்படையில் தென்னை மரக்கன்றுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
காணியின் உரிமையினை உறுதிப்படுத்த காணி தொடர்பான ஆவணங்களின் பிரதிகளை சமர்ப்பித்து தென்னை மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள முடியுமென கல்பிட்டி தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.எம்.ஹிஜாஸ் தெரிவித்தார்.
கல்பிட்டி பிரதேசத்தின் தெங்கு உற்பத்தியாளர்கள் இது தொடர்பான மேலதிக விபரங்களை திங்கட்கிழமைகளில் கற்பிட்டி பாலக்குடாவிலுள்ள அமைந்துள்ள கமநல சேவை காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.எம்.ஹிஜாஸ் மேலும் தெரிவித்தார்.
No comments