கரப்பந்தாட்ட சுற்றின் செம்பியனாக சம்மாட்டிவாடி கோல்ட் ஸ்டார் கழகம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி அம்மாதோட்டம் நிவு சிக்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் செம்பியன் கிண்ணத்தை சம்மாட்டிவாடி கோல்ட் ஸ்டார் கழகம் பெற்றுக் கொண்டது.
இக் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் அம்மாதோட்டம் நிவு சிக்ஸ் கழகமும் சம்மாட்டிவாடி கோல்ட் ஸ்டார் கழகமும் பலப்பரீட்சை நடாத்தியது. இதில் சம்மாட்டிவாடி கோல்ட் ஸ்டார் கழகம் 5:3 என்ற சுற்றுக்களின் அடிப்படையில் வெற்றி பெற்று செம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இக்கழகத்திற்கான வெற்றிக்கேடயத்தையும் பணப் பரிசில்களையும் அம்மாதோட்டம் ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் ஹரமைன் வழங்கி வைத்தார் அத்தோடு சிறந்த பந்து அறைபவருக்கான கிண்ணத்தை நிம்ராஸ் பெற்றுக்கொணடதுடன் விசேட வீரருக்கான கிண்ணத்தை வசீம் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments