Breaking News

புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களின் நலன்களின் விடிவுக்காக கவனம் செலுத்திய பா உ அலி சப்ரி ரஹீம்

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் அழைப்பின் பேரில் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவினரோடு பாராளுமன்றத்துக்கு சென்று புத்தளம் உப்பளங்களின் காணி விவகாரம் சம்பந்தமாக முக்கியமான பல தரப்பினர்களோடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.


காணிகள், சுற்றுலாத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்  ஹரீன் பெர்ணான்டோ, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், காணிகள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்ஹ உள்ளிட்ட மற்றும் பல பாராளுமன்ற அங்கத்தவர்கள், காணி அமைச்சின் செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், காணி நிர்ணயத் திணைக்களத்தின் செயலாளர் நாயகம் ஆகியோரை சந்தித்து பாரளுமன்ற உறுப்பினர்  அலி சப்ரி ரஹீம் விடயங்களை விபரமாக விளக்கினார். 


மன்னார் வீதி காணிகள் உரிய அங்கத்தவர்களைத் தவிர்த்து புதிய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதாக அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள்  புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் உறுதியளித்தனர்.








No comments

note