கற்பிட்டியில் ஹஜ் பெருநாள் ரேஸ் மூன்றாம் பெருநாள் அன்று கே.ஆர்.சீ அறிவிப்பு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டியில் எதிர் வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கே.ஆர்.சீ அமைப்பின் ஒழுங்கமைப்பில் கற்பிட்டி மக்களினால் பிரமாண்டமான முறையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மோட்டர் குரோஸ் ரேஸ் ஹஜ் பெருநாள் மூன்றாம் நாள் ( மூன்றாம் பெருநாள் தினம்) கற்பிட்டி தேத்தாவாடி ரேஸ் தரவையில் நடாத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ள பட்டுள்ளதாக கே.ஆர்.சீ அறிவித்துள்ளது.
அத்தோடு இம்முறை இடம்பெற உள்ள மோட்டர் குரோஸ் போட்டியில் முதலிடம் பெறும் வெற்றியாளருக்கு ஒரு இலட்சம் ரொக்க பணம் பரிசாக வழங்கப்படும் எனவும் மோட்டர் சைக்கிள் வீரர்களிடம் நுழைவுக் கட்டணம் அறவிடப்படாது எனவும் போட்டியில் கலந்து கொள்வதற்காக வெளி இடங்களிவ் இருந்து வருகைதரும் வீரர்களுக்கான சகல வசதிகளும் செய்து கொடுப்தற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளவது என்ற தீர்மானமும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments