புத்தளம் மாவட்ட நூலக ஊழியர்களுக்கான பகுப்பாக்க செயலமர்வு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
இலங்கை நூலக சங்கமும், புத்தளம் உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகமும் இணைந்து நடத்திய புத்தளம் மாவட்ட நூலக ஊழியர்களுக்கான பகுப்பாக்க செயலமர்வு (30) வியாழக்கிழமை புத்தளம் புத்தளம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உதவி உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி எச்.எம்.டபில்யூ.பீ.ஹேரத் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இலங்கை நூலக சங்க விரிவுரையாளரும், களனி பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகரும், நூலக சங்க பொது நூலக குழுவின் போஷகருமான விஜித் ஜயசிங்ஹ மற்றும் புத்தளம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் கே.எம்.நிஷாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
Post Comment
No comments