"நட்பால் வென்றிடுவோம்" எனும் தொனிப் பொருளில் இடம் பெற்ற மாணவர்களை வலுவூட்டும் கருத்தரங்கு!.
"நட்பால் வென்றிடுவோம்" எனும் தொனிப் பொருளில் பு/ பெருக்குவட்டான் முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் பு/சமீரகம முஸ்லிம் வித்யாலயம் இணைந்து இவ்வாண்டு 2024 தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களை வலுவூட்டும் வகையில் நேற்று முன்தினம் கருத்தரங்கு இடம் பெற்றது.
இக்கருத்தரங்கை புத்தளம் பெருக்குவட்டான் முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் எஸ்.எச்.எம். அன்சார் மற்றும் பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலய அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மிஹ்ழார் (நளீமி) ஆகியோர் ஆலோசனையோடு வகுப்பாசிரியை டொரின் மங்கலிகா ஏற்பாடு செய்திருந்தார்.
கருத்தரங்கை பதுளை நூரானியா முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர் எஸ் டிசாந்த் நடத்தினார். இக்கருத்தரங்கு பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு சகல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பாடசாலை அபிவிருத்தி குழுவினருக்கும், இரு அதிபர்களும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
No comments