Breaking News

அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி...!

 ரஸீன் ரஸ்மின்

அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்படவுள்ளது.


மத விவகார கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்த சமாதான நீதவான் பதவியை வழங்க தீர்மானித்துள்ளனர்.


அஹதிய்யா பாடசாலைகளில் தொடர்ச்சியாக இருபது (20) வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகின்ற ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு நீதி அமைச்சு ஊடாக  சமாதான நீதவான் பதவி வழங்குவதற்காக தகவல்களைப் பெற விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மூலம் கோரப்பட்ட ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தின் பிரதியை இம்மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்திடம் ஒப்படைக்குமாறு புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாரூக் பதீன் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் அதிபர் ,செயலாளர், மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவினர், ஏனைய அஹதிய்யா பாடசாலைகளின் பொறுப்பாளர்களும் கவனத்திற் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.


இதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0775394999 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.




No comments

note