Breaking News

பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் வடமேல் மாகாண புதிய ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பு!

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் செவ்வாய்க்கிழமை (07) வடமேல் மாகாண ஆளுநர் அகமட் நசீர் அவர்களை குருநாகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து நேரடியாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.


சகல இனத்தவர்களுக்கும் பொதுவான சேவையை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தம்மை வடமேல் மாகாணத்திற்கு நியமனம் செய்துள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், வடமேல் மாகாணத்தின் சமய தலைவர்கள் அனைவரையும் சந்தித்து புத்தளம் மாவட்டம் மற்றும் குருநாக்கல் மாவட்டம் ஆகியவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும், ஆற்றப்பட வேண்டிய பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் வடமேல் மாகாண ஒதுக்கீட்டின் மூலம் ஆற்றப்பட வேண்டிய சேவைகள் தொடர்பான அறிக்கை ஒன்றையும் கையளித்தார்.





No comments

note