Breaking News

க.பொ.த. (சா/த) எழுதும் மாணவர்களுக்கு முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம் ஆசிக் வாழ்த்து

எந்தவித பதற்றமும் இல்லாமல் நம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். உயர் கல்வி கற்க நீங்கள் இன்று முதல் எழுத‌ இருக்கும் பரீட்சை மிக முக்கிய பங்கு வகிக்கும்.


சாதாரண தரப்பரீட்சை நாளை நடைபெறும் நாளில், சாதரண தரம் எழுதும் மாணவர்களுக்கு  அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஐ.எம் ஆசிக் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்


பாலர் வகுப்பு முதல் 11 ஆம் தரம் வரை பல சிரமத்துக்கு மத்தியில் கல்வியினைக் கற்று கல்வியிலும், வாழ்க்கையிலும், அடுத்த இலக்கைத் தீர்மானிக்கும் இறுதி நாளான இன்றைய நாள் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்ற என் அன்பு சிறார்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு கற்ற கல்வியை கேட்கப்பட்டிருக்கின்ற கேள்விகளுக்கு சரியாக சிந்தித்து விடையினை நுணுக்கமாக விடை அளிக்க வேண்டும்.


மேலும் எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். உங்கள் கடும் உழைப்பை  காகிதத்தில் பதிவிட இருக்கிறீர்கள். எந்தவித பதற்றமும் இல்லாமல் நம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். இது கல்வி வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்த போகிற தேர்வு. உயர் கல்வி கற்க இந்த பரீட்சை மிக முக்கிய பங்கு வகிக்கும். ஆதலால் மிக கவனமாக கேள்விகளை ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து புரிந்து விடையளிக்க வேண்டும். உங்கள் பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆசி மற்றும் உங்கள் கடும் உழைப்பு கண்டிப்பாக உங்களுக்கு பெரிய வெற்றியை பெற்று தரும் என்று இறைவனிடம் பிராத்திக்கிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.







No comments

note