வடமேல் ஆளுநரின் நேரடி கள விஜயம் தெலியாகொன்ன பிரதேசத்திற்கு பொது விளையாட்டு மைதானம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் இன்று (10) குருநாகல் மாவட்டத்தில் உள்ள தெலியாகொன்ன பிரதேசத்திற்கான நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இவ் விஜயத்தின் போது சுமார் பத்தாயிரத்திற்கு அதிகமான மக்கள் தொகையை கொண்ட தெலியாகொன்ன பிரதேசத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பொது விளையாட்டு மைதானம் இல்லாது இப்பிரதேச இளைஞர்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் இதன் காரணமாக இப் பிரதேச விளையாட்டு வீரர்கள் தமது திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொண்டு வருவதற்க்கு சிறமப்படுவதாகவும் மக்கள் ஆளுநருக்கு சுட்டி காட்டியதை கவனத்தில் எடுத்த ஆளுநர் விரைவில் பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதுடன் மக்களின் ஏனைய அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார்.
No comments