Breaking News

முந்தல் பொலிஸார் – வர்த்தக சங்கம் இடையிலான விசேட கலந்துரையாடல்

தாரவில்லு சந்தி, புளிச்சாக்கும் சந்தி கீரியங்கள்ளிக்கிடையில் அமையப்பெற்ற கடை உரிமையாளர்களின் வர்த்தக சங்கக் கூட்டம் 2024 மே மாதம் 31ம் திகதி புதுக்குடியிருப்பு கிளினிக் சென்டர் கட்டிடத்தில் மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது.


இக்கூட்டத்தில் செயளாலர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டு முதலாவது கூட்டத்தில்  புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாக அங்கத்தவர்களாக


தலைவர் - சகோதரர் A.J.M. ஜஸார் 

செயலாளர் - சகோதரர் N.M. ஹபீல்

உப தலைவர் -  சகோதரர் W.M.ஸந்தன 

பொருளாளர் - சகோதரர் M.H. ஹிஷாம் 

உப செயலாளர் - சகோதரர் K.B. நிபால் ஆசிரியர் மற்றும் 21  உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகம் சபையோர் முன்னிலையில் வாசிக்கப்பட்டது


அதைத் தொடர்ந்து முந்தல் பொலிஸ் பொறுப்பதிகாரி கெளரவ அசித்த லக்ருவான் அவர்களால் வர்த்தக  சங்கம் என்றால் என்ன , வர்த்தக சங்கம் எவ்வளவு சக்தி மிக்க அமைப்பு, திருடர்களிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என பல அனுபவமிக்க விடயங்களை பகிர்ந்து கொண்டார். அத்தோடு முன்னெச்சரிக்கை செயற்பாடுகளாக உங்கள் வியாபார நிலையங்களில் முடியுமான வரை கண்கானிப்பு கெமராக்கல் பொறுத்துதல் கெமராக்கல் உள்ள இடங்களில் அதன் தொழில்நுட்ப செயற்பாடுகளை உறுதிப்படுத்தல், கடைகளுக்கு முன்னும் பின்னும் மின் குமிழிகளை போடுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கியதோடு  என்றும் நானும் எங்களுடைய பொலிஸ் அதிகாரிகளும் உங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம் என்பதையும் முன்வைத்தார்.


அத்தோடு சபையோர் முன்னிலையில் கலந்துரையாடல் நடைபெற்று முதற்கட்ட வேளைத்திட்டமாக தினமும் 5 பேர் கொண்ட குழு இரவு நேரங்களில் பாதுகாப்பில் ஈடுபடவும தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


(புளிச்சாக்குளம் - புதுக்குடியிருப்பு)

ஹபீல் நிஜாமுதீன் (கபூரி,JP)









No comments

note