Breaking News

ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் வெள்ள நிவாரண பணி நான்காவது நாளாகவும் தொடர்கிறது

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம்  மணல்தீவு சேவந்தீவில் வசிக்கும் 67 இந்து மத குடும்ப சகோதரர்களுக்கும் 10 சிங்கள குடும்ப சகோதரர்களுக்கும் 15 கிருஸ்துவ மத குடும்ப சகோதரர்களுக்கும் மேலும் பலாஹ் மஸ்ஜித் (கடையாகுளம்) அஷ்ரப்பிய்யா மஸ்ஜித் ஹஸனாத் மஸ்ஜித் மொத்தமாக 500 குடும்பங்களுக்கு தேவையான இரவு போசணம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.


இதில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அனைத்து உலமாக்களும் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று சமைத்த உணவு பொதிகளை கொடுத்ததுடன் மஸ்ஜித் நிர்வாகிகள் சமூக சேவையாளர்கள் என பலரும் மேற்படி வெள்ள நிவாரண வேலைத்திட்டத்தில் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


வாங்குவது போன்று படத்தில் உள்ள அனைவரும் கண்ணியமான மஸ்ஜித் நிர்வாகத்தில் உள்ளவர்கள் அல்லது சமூக சேவையாளர்கள்.


இவர்கள் மூலமாகத்தான் அந்த அந்த இடங்களுக்கு உணவு பொதிகள் விநியோகம் செய்வதற்கு மிகவும் உதவி செய்தவர்கள்.


















No comments

note