Breaking News

கற்பிட்டியில் தொல்பொருட்களுடன் ஒருவர் கைது...!

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி - ஆலங்குடா பகுதியில் வீடொன்றிலிருந்து சட்டவிரோதமான முறையில் வைத்திருந்ததாக தங்கத்தலானது என சந்தேகிக்கப்படும்  தொல்பொருட்களுடன் சந்தேகநபர் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி, ஏத்தாளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


இலங்கை கடற்படைக்கு சொந்தமன விஜய கடற்படையினரும், புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளும் இணைந்து குறித்த பகுதியில் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த தொல்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


குறித்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றினை சோதனை செய்த போது, அந்த வீட்டிற்குள் மிகவும் சூட்சகமான முறையில் சட்டவிரோதமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.


தங்கத்தில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வால் ஒன்றும், ஆமை , குதிரை மற்றும் இரண்டு சிறிய சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்திலானது என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளிக்காக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.





No comments

note