புத்தளம் மாவட்டத்தில் கிராம. உத்தியோகத்தர் மூன்றாம் நிலை பதவிக்கு 91 பேர் தகுதி
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கிராம உத்தியோகத்தர்கள் மூன்றாம் நிலை பதவிக்கான எழுத்து மூல பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலண்டு பயிற்சிக்கு புத்தளம் மாவட்டத்தில் இருந்து 91 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளனர்.
இதன்படி புத்தளம் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களான கற்பிட்டி 03 , புத்தளம் 03 , வண்ணாத்தவில்லு 08 , கருவலகஸ்வெவ 09 , நவகத்தேகம 01, முந்தல் 07, மஹகும்புக்கடவெல 01, ஆனமடு 02, பல்லம 01, ஆராச்சிகட்டுவ 07, சிலாபம் 05, மாதம்ப 08, மஹவெவ 06, நாத்தாண்டி 13, வென்னப்புவ 13, தங்கொட்டுவ 04 என்ற எண்ணிக்கையில் புத்தளம் மாவட்டத்தில் 91 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கிராம உத்தியோகத்தர்களாக நாடு முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 1942 பேருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (08) காலை 10.30 மணிக்கு அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பிரியந்தவின் பங்குபற்றுதலுடன் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments