கற்பிட்டியில் 23 கோடி பெறுமதியான அம்பர் மீட்பு; இருவர் கைது...!
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - கற்பிட்டி, கண்டக்குளி பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான அம்பர் எனும் திமிங்கலத்தின் வாந்தியுடன் இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (29) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடலில் மிதந்த 23 கிலோ நிறையுடைய அம்பர் எனும் திமிங்கல வாந்தியை இரகசியமான முறையில் எடுத்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு மீனவர்களால் எடுத்துவரப்பட்ட குறித்த அம்பரை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கற்பிட்டி, கண்டல்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் ( திமிங்கலத்தின் வாந்தி) கடந்த 12 ஆம் திகதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகத்தின் பெயரில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments