கிராம சேவையாளர் தரம் 03 க்கு முந்தல் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேர்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும். புத்தளம் எம்.யூ.எம் சனூன் )
கிராம சேவையாளர் தரம் 3 க்கான பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலண்டு பயிற்சிக்கு புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் இருந்து ஏழு விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவரகளின் பெயர்கள் :
01. மொஹமட் றிபாய்தீன் பாத்திமா றிஸ்ஹா
02. இஸ்மாயில் பாத்திமா பர்வின்
03. குத்துபுதீன் பாத்திமா ஜாயிஷா
04. உக்குபண்ட ஆராச்சிகே லினுக்சி ஹன்சிகா பண்டார
05. காந்தவேல் அஜந்தீ
06. வர்ணகுலசூரிய மஹலிகமகே தக்சிலா சிறிமாலி பெர்நாந்து
07. பவுல் இஷாரா டில்ஹானி
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (08) காலை 10.30 மணிக்கு அலரி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பிரியந்தவின் பங்குபற்றுதலுடன் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments