கற்பிட்டி பிரதேச செயலகத்தின் பெருநாள் புத்தாண்டு விழாக்கள்
(கற்பிட்டி எம்.எச்.எம் சிராஜ்)
கற்பிட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டுகளை முன்னிட்டு இடம்பெற்ற விளையாட்டு விழா கடந்த வியாழக்கிழமை (18) கற்பிட்டி பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் ஜே.எம்.சமில இந்திக ஜயசிங்க தலைமையில் இடம்பெற்றது .
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் சுமார் 5 வருடங்களின் பின்னர் வெகு சிறப்பாக நடைபெற்றது இவ் விளையாட்டு விழாவில் பிரதேச செயலகத்தின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என சகலரினதும் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுகளான முட்டிஉடைத்தல், கயிறு இழுத்தல், நீர் நிறைத்தல், யானைக்கு கண் வைத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுகளுடன் இலங்கையின் பாரம்பரிய நடன நிகழ்வும் இடம் பெற்றமை விசேட அம்சமாகும்.
அன்றைய தினம் மக்கள் சேவைக்கு எவ்வித இடையூறும் இன்றி நடைபெற்ற இந்நிகழ்வு இன,மதங்கள் கடந்து ஒற்றுமையை பறை சாட்டும் வகையில் இவ்வாறானதொரு விளையாட்டு விழாவை வேலைப்பழு நிறைந்த இக்காலப்பகுதியில் ஏற்பாடு செய்திருந்தமைக்காக கற்பிட்டியின் புதிய பிரதேச செயலாளர் ஜே.எம்.சமில இந்திக ஜயசிங்கவை பாராட்டுவது டன் தமது நன்றிகளையும் தெரிவிப்பதாக பிரதேச செயலக ஊழியர்கள் தெரிவித்தனர்.
No comments