புத்தளத்தில் இயங்கும் சர்வதேச ஹோட்டல் முகாத்துவ அகடமியில் முதல் சமையல் தொகுதி மாணவர்கள் தமது வெற்றியை பகிர்ந்து கொணட போது
(எம்.யூ.எம்.சனூன்)
புத்தளத்தில் இயங்கும் சர்வதேச ஹோட்டல் முகாத்துவ அகடமியில் முதல் சமையல் தொகுதி மாணவர்கள் தமது வெற்றியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இங்கு கல்வி பயிலும் முதல் தொகுதி மாணவர்கள் தங்கள் முதல் நடைமுறை அமர்வின் போது தங்கள் திறமை மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தி தமது இப்தார் மெனுவை உருவாக்கினர்.
பல்வேறு பாரம்பரிய மற்றும் சமகால உணவு வகைகளை தயார் செய்வதில் மாணவர்கள் அயராது உழைத்து, அவர்களின் படைப்பாற்றல் மற்றும் சமையல் கலை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
முக்கிய உணவுகள் மற்றும் இனிப்புகள் வரை, அவர்கள் தங்கள் சுவையான படைப்புகளால் ஆசிரியர்களையும் அவர்களது சகாக்களையும் கவர்ந்தனர்.
No comments