Breaking News

புத்தளத்தில் வரலாற்றுப் படிப்பு வட்டம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளத்தில் ஒரு வரலாற்றுப் படிப்பு வட்ட ம் ஓய்வு பெற்ற புத்தளம் கல்விப் பணிப்பாளர் இசட். ஏ சன்ஹீர் மற்றும் பஸ்லூர் ரஹ்மான் ஆகியோரின் ஏற்பாட்டில் சிராஜ் மஷ்ஹூர் நெறிப்படுத்தலில்  புத்தளத்தில் இடம்பெற்றது 


இதில் புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசங்களில் உள்ள வரலாற்று ஆர்வலர்களும்  வரலாற்றுத் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்ற நான்கு பெண்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்க விடயம்.


தென்னிந்தியத் தொடர்புக்கான நுழைவாயிலாக புத்தளம், கற்பிட்டி பிரதேசங்கள் காணப்படுவது பற்றியும்  விரிவாக கலந்துரையாடப்பட்டது.


புத்தளம் - கற்பிட்டி பிரதேசத்தில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சான்றுகள் பல உள்ளன. அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் ஒரு அரும்பொருள் காட்சியகத்தை நிறுவுவது பற்றியும் கடந்த காலத்தில் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றியும் வருடாந்தம் ஒரு பிராந்திய கருத்தரங்கையும் ஏற்பாடு செய்ய வேண்டும்  என்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. 


கற்பிட்டி பிரதேசத்தில் வரலாற்றை தொகுக்கும் நோக்கோடு பல வருடங்களுக்கு முன்பு வரலாற்று ஆய்வுக் குழு உருவாக்கப்பட்டு அதன் ஊடாக கற்பிட்டி பிரதேசத்திற்கான மாதாந்த பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டமையும்விசேட அம்சமாகும்.








No comments