கற்பிட்டி அல் அக்ஸாவில் சாதாரண தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்கான பிரியா விடை மற்றும் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வு இன்று (30) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பிரதி அதிபர்களான எம்.நஸ்றீன் மற்றும் எஸ் எப் சாஜீனாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சாதரணதர வகுப்பு ஆசிரியர்கள் பகுதித் தலைவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் சகல சாதாரணதர மாணவர்களுக்குமான பரீட்சை அனுமதி அட்டைகளும் அவர்களின் பெற்றோர்களால் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
No comments