Breaking News

கற்பிட்டி அல் அக்ஸாவில் சாதாரண தர மாணவர்களுக்கான இறுதி செயலமர்வு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம் யூ.எம் சனூன்)

 கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுத உள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கோடு பாட ரீதியாக தொடராக இடம்பெற்ற இலவச தொடர் கருத்தரங்குகளின் இறுதியாக சித்திரப் பாட செயலமர்வு செவ்வாய் (30) இடம்பெற்றது 


கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதிச் செயலரமர்விற்கான அனுசரனையை 2000 ம் ஆண்டு சாதாரண தர பழைய மாணவர்கள் வழங்கி இருந்தனர் .


கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் 1991 ஆண்டு தொடக்கம் சுமா‌ர் 10 வருடங்கள் அல் அக்ஸா தேசிய பாடசாலையில் சித்திர பாட ஆசிரியராக பணியாற்றியவரும், தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னால் விரிவுரையாளரும், கல்வி அமைச்சின் சித்திர பாட சிரேஷ்ட வளவாளராகவும், சித்திர பாட ஆசிரியர் ஆலோசகராகவும் செயல்பட்டு வரும் இலங்கையில் பிரபலமான சித்திர பாட வளவாளர் கற்பிட்டி மண்ணின் மைந்தன் எம்.எம். மொஹமட் ஆசிரியரால் இறுதி கருத்தரங்காக சித்திர பாட செயலமர்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments