Breaking News

ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் றைசிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடு - காலி முகத்திடல் முன்பாக ஒத்திகை

ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் றைசியின் இலங்கை வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதற்கான ஒத்திகை காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக இன்று நடைபெற்றுள்ளது.


இஸ்ரேல் - ஈரான் முறுகல் நிலையை அடுத்து ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிச்சயமற்ற நிலையில் இருந்த போதிலும் றைசின் இலங்கை விஜயம் உறுதி படுத்தப்பட்டுள்ளதை வெளிநாட்டு வெளிவிவகார  அமைச்சர் அலி சப்ரி ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தி உள்ளார்.


இதே வேளை இவரின் வருகையை அரசாங்க தகவல் திணைக்களமும் உறுதிப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் சென்றுள்ள றைசி அங்கு இரண்டு நாள் விஜயத்தை நிறைவு செய்து 24 ஆம் உமா ஓயா பலநோக்கு நீர்மின் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து ஆரம்பித்துவைக்கவுள்ளார்.


ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க உடன் இருதரப்பு பரஸ்பர நல்லிணக்க பொருளாதார நலன்கள் குறித்து பேச்சு வார்த்தைகளில் இப்றாஹிம் றைசி ஈடுபடவுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




No comments

note