Breaking News

குவைத்தில் புத்தளம் மாவட்ட மக்களின் பெருநாள் ஒன்றுகூடல்

குவைத்தில் வாழும் புத்தளம் மாவட்ட மக்களுக்கான பெருநாள் ஒன்றுகூடல் ஒன்று தூய தேசத்திற்கான இயக்கத்தின் சர்வதேச செயற்குழுவினால் கடந்த 12ம் திகதி ஏப்ரில் மாதம் வெள்ளிக்கிழமை மாலியா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்த ஒன்றுகூடலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தளத்து உறவுகள் கலந்துகொண்டதோடு, சமூகத்தை மையமாகக்கொண்டு சில தலைப்புகளில் உரைகளும் நிகழ்த்தப்பட்டன. இந்த நிகழ்வுக்கு தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் விஷேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.


இந்த ஒன்றுகூடலில் தூய தேசத்திற்கான ஏற்பாட்டில் குவைத்தில் வாழும் புத்தளம் மாவட்ட மக்களை ஒன்றிணைத்து தகவலைகளை பரிமாற்றிக்கொள்வதற்கான அமைப்பு ஒன்றும் "Kuwait Puttalamese" என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த குழுமத்தின் நிர்வாகிகள், புதிதாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கங்கள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் வருகைத்தந்தவர்களுக்கு தெளிவுபடுத்தியதும் குறிப்பிடத்தக்கது.


புலம் பெயர்ந்து வாழும் புத்தளம் மாவட்ட மக்களை கூட்டாக ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக கத்தார், ஜித்தாஹ், மதீனா, ரியாத், தமாம், ஐக்கிய அரபு இராஜியம், ஓமன், ஐரோப்பா போன்ற இடங்களிலும் முன்னெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த வேலைத்திட்டத்தினை தூய தேசத்திற்கான இயக்கத்தின் சர்வதேச செயற்குழு உறுப்பினர் தோழர் இஸ்ராம் மரிக்கார் தலைமை தாங்கி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
















No comments

note