கற்பிட்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் கலந்துரையாடல்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச ஐக்கிய மக்கள் சக்தியின் உயர் பீட அங்கத்தவர்களுடனான விசேட கலந்துரையாடல் கற்பிட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் எம் எப்.எம் றில்மியாஸ் தலைமையில் அவரின் இல்லத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்டம் மற்றும் புத்தளம் தொகுதி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமி கலந்து கொண்டார். இதில் கற்பிட்டி நகருக்குள் வெற்றிடமாக காணப்பட்ட மண்டலக்குடா வட்டாரத்திற்கான வேட்பாளராக எம்.எஸ்.எம் ஹிஸ்மி ஆசிரியரை அமைப்பாளர் றில்மியாஸ் முன்மொழிய சபையோர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். அத்தோடு புத்தளம் தொகுதிக்கு சம அதிகாரத்துடன் கூடிய முஸ்லிம் அமைப்பாளர் ஒருவர் நியமிக்க பட வேண்டியதன் தேவைப்பாடு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மே தினக் கூட்டம் தொடர்பாகவும் அதற்கான ஏற்பாடுகளை கற்பிட்டியில் மேற்கொள்வதற்கான பொறுப்புக்கள் கற்பிட்டி நகர உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments