Breaking News

யுக்திய சுற்றிவளைப்பு என்ற போர்வையில் நாவக்காடு பகுதியில் கொள்ளை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

நுரைச்சோலை நாவற்காடு பகுதியில் நேற்று (21) போலி பொலிஸ் குழுவொன்று வீடொன்றிற்குள் புகுந்து தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசி மற்றும் பணம் உள்ளிட்ட 90 இலட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை கொள்ளையடித்து வீட்டில் உள்ளவர்களை அறையில் அடைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நாவற்காடு பகுதியில் புகையிலை மற்றும் மரக்கறி வர்த்தகரின் வீட்டிலே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொள்ளைச் சம்பவத்தின் போது வீட்டின் வர்த்தகர், அவரது மனைவி, தாய் மற்றும் வர்த்தகரின் மூன்று மகள்கள் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸாரின் சீருடைக்கு நிகரான சீருடையில் வந்துள்ள கொள்ளை கும்பல், 'யுக்திய' தேடுதல் நடவடிக்கை என்று கூறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.


குறித்த சந்தேக நபர்களை இதுவரை பொலிஸாரால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.




No comments

note