Breaking News

மதுரங்குளி பிரதேசத்தில் வீடொன்றில் தீ

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

மதுரங்குளி, முக்குதொடுவாவை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இதன்போது வீட்டிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் ஞாயிறு இரவு 11 மணியளவில் இடம்பெற்றதோடு, சிலாபம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.


அத்தோடு, இந்த பிரதேசத்தில் வாழும் இருவரால் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்த நிலையில், அப் பிரதேசத்தின் டின் மீன் தொழற்சாலை தொடர்பாக வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகவே தீ விபத்து இடம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




No comments

note