புத்தளம் - கொத்தாந்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தான் முதலிடம்
நுவரெலியா - தியத்தலாவையில் நேற்று (21) இடம்பெற்ற Fox Hil Motocross 125cc ஓட்டப் போட்டியில் புத்தளம் - கொத்தாந்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தான் முதலிடம் பெற்றுள்ளார்.
முதலாமிடத்தைப் பெற்று புத்தளம் மாவட்டத்திற்கும், ஊருக்கும் பெருமை சேர்த்த கமால்தீன் ஹம்தானை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கொத்தாந்தீவு ஊர் மக்கள் சார்பாக முதலாமிடம்பெற்ற கமால்தீன் ஹம்தானை பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கொத்தாந்தீவு ஜும்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஐ. எம். மர்சூக் (இஹ்ஸானி) தெரிவித்தார்.
கமால்தீன் ஹம்தானுக்கு மதுரங்குளி மீடியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Event - 16 MX Racing Motocross Bike 125cc (2T)
Winner - Kamaldeen Hamdhan
No comments