மதுரங்குளி - கனமூலையில் கோலாகலமாக இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கனமூலை சேகு அலாவுதீன் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த மாபெரும் விளயாட்டுப் போட்டி (28) கனமூலை எம்.எஸ். சேகுஅலாவுதீன் பொது விளையாட்டு மைதானத்தில் முன்னாள் கற்பிட்டிப் பிரதேச சபைத் தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றது.
நோன்புப் பெருநாளை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்த இவ்விளையாட்டுப் போட்டியில் சிறுவர்களுக்கான துவிச்சக்கர வண்டி ஓட்டம், முட்டி உடைத்தல், சறுக்கு மரம் ஏறுதல், பாய் இழைத்தல், முச்சக்கர வண்டி ஓட்டம், மோட்டார் சைக்கிள் ஓட்டங்கள் போன்ற இன்னும் பல போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் , முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். ரியாஸ், ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஜேசுதாஷன் முந்தல் - மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஏ.எச். எம். ஹாறூன், கனமூலை பெரிபள்ளியின் தலைவர் அஷ்ஷெய்க் எச். எச். எம். நஜீம் (ஷர்கி) உள்ளிட்ட மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை அண்மையில் தியத்தலாவையில் இடம்பெற்ற Fox Hill Super Cross போட்டியில் 125CC மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் முதலிடம்பெற்ற கொத்தாந்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தானை கௌரவிக்கும் வகையில் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன் மற்றும் கணமூலை சேகு அலாவுதீன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அஸ்ரின் அலாவுதீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments