Breaking News

முதலைப்பாளி முஸ்லிம் மகாவித்தியாலயத்துக்கு புதிய ஆங்கில ஆசிரியை வருகையையொட்டி இடம்பெற்ற மர நடுகை நிகழ்வு

(எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்)

முதலைப்பாளி முஸ்லிம் மகாவித்தியாலயத்துக்கு  புதிய ஆங்கில ஆசிரியை வருகையையொட்டி மர நடுகை நிகழ்வுகள் பாடசாலை வளாகத்தில் அண்மையில் (25) இடம்பெற்றது.


கல்பிட்டியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சிபா பர்வீன் குறித்த பாடசாலைக்கு ஆங்கில பாட ஆசிரியையாக வருகை தந்துள்ளார்.


அதிபர் எஸ்.பீ.எம்.முஸவ்விர், பிரதி அதிபர் ஏ.எம்.ரிஸ்வி ஆகியோர் முன்னிலையில் அவர் கடமையேற்றதோடு அன்றைய தினம் பாடசாலை வளாகத்தில் அவரால் மரமும் நடப்பட்டது.


இந்நிகழ்வில் ஆசிரியையின் பெற்றார்கள், புத்தளம் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் ஆசிரியர் ஏ.எச்.எம்.சாபி, சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஆசிரியர் எச்.எம். சுஐப், தரம் 6 வகுப்பாசிரியை எம்.ஜே. ஜலீசா பானு, சுற்றாடல் பொறுப்பாசிரியர் ரம்ஸான் மொஹமட், எம்.எம்.ரிவானாஸ், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.எம்.ராசிக் உள்ளிட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். 


அன்றைய தினம் தரம் ஆறு மாணவர்களை கொண்டு  அதிபர் எஸ்.பீ.எம். முசவ்விர் தலைமையில் சுற்றாடல் முன்னோடி கழகம் உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.




No comments

note