மோட்டார் சைக்கிள் ஓட்ட போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற கமால்தீன் ஹம்தானை இல்லத்திற்கு சென்று பாராட்டி கௌரவப்படுத்திய பா.உ அலி சப்ரி றஹீம்
Fox Hill Super Cross 2024 போட்டியில் 125 CC மோட்டார் சைக்கிள் ஓட்ட போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற புத்தளம் கொத்தாந்தீவைச் சேர்ந்த கமால்தீன் ஹம்தானை நேரில் பாராட்டும் முகமாக அவரது இல்லத்திற்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேரில் சென்று (24) தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டும் நிகழ்வு கூடிய விரைவில் புத்தளத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இதன்போது தெரிவித்தார்.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
No comments