Breaking News

ரஹ்மத் பவுண்டேசனால் மாவடிப்பள்ளியில் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

புனித ரமழானை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேச ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.றியால் ஹாமி மூலம் அடையாளப்படுத்தப்பட்ட பயனாளர்களுக்கு YWMA மற்றும் CSMWA பேரவைகளின் ஒருங்கிணைப்பில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனால் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


மாவடிப்பள்ளி அல்-அஷ்ரஃப் மகா வித்தியாலய ஹுஸைன் ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (06) இடம்பெற்ற விநியோக நிகழ்வில்பவுண்டேசன் ஸ்தாபகரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் மாவடிப்பள்ளி ஜம்மியதுல் உலமா தலைவர் ஏ.எம்.முஹம்மது தம்பி மெளலவி, மாவடிப்பள்ளி ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாக சபைத் தலைவர் வை.ஏ.மனாப் உட்பட ஊர்ப் பிரமுகர்கள், பயனாளிகள், பிரதேசவாசிகள் மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.










No comments

note