Breaking News

நரக்களி பாடசாலையில் இடம்பெற்ற மாணவர்களுக்கான சித்திரப்பாட கருத்தரங்கு

 (எம்.யூ.எம்.சனூன்)

கல்பிட்டி வீதி நாயக்கர்சேனை, தேத்தாப்பளை, நாவற்காடு, மாம்புரி மற்றும் நரக்களி பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப்பாட கருத்தரங்கு அண்மையில் நரக்களி பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


புத்தளம் கல்வி வலயத்தின் சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகரும் நாடறிந்த ஓவியருமான எம்.எம்.முஹம்மது இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.


கிராமப்புற பாடசாலைகளின் மாணவர்களுக்கு இவ்வாறான கருத்தரங்கினை ஏற்பாடு செய்தமை தமக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் இதனை ஏற்பாடு செய்த புத்தளம் வடக்கு கோட்டத்துக்கான பிரதி கல்வி பணிப்பாளர் அஸ்கா அவர்களுக்கு மாம்புரி ரோமன் கத்தோலிக்க சிங்கள தமிழ் மகா வித்தியாலய பிரதி அதிபர் மெரிய லாவுஸ் மேர்ஸி  மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.










No comments

note