Breaking News

புத்தளம் கல்லடியில் விபத்து மூன்று பேர் காயம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியின் கல்லடி பிரதேசத்தில் நேற்று  திங்கட்கிழமை (22) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புத்தளத்திலிருந்து ஆனமடுவ பகுதிக்குச் சென்ற லொறியுடன் ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் வேனிற்குப் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தின் போது  வேனில் பயணித்த சாரதி உட்பட மூவரில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . 


ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அத்துடன் லொறியின் சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில்  புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.







No comments

note