Breaking News

கற்பிட்டியில் சட்டவிரோதமாக களஞ்சிபடுத்தப்பட்ட தங்குஸ் வலைகளுடன் ஒருவர் கைது

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்யூ.எம் சனூன்)

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு களஞ்சியப்படுத்தி வைத்நிருந்த தங்குஸ் வலைகள் அடங்கிய 55 உறைகளையும் அதனுடன் தொடர்பானவர் என்ற சந்தேகத்தின் பெயரில் மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ஒருவரையும் இன்று(24) பிற்பகல் கற்பிட்டி பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது; கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.ஏ.டப்யூ.எஸ் எதிரிசிங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரான வன்னிநாயக்க(80413), பஸ்நாயக்க  (100716) கற்பிட்டி கடற்படை முகாம் லெப்டினன் டப்யூ.டி.எம்.பி வன்னிநாயக்க அதிகாரி டப்யூ.ஈ.ஜீ.என்.என் கருனாசேன மற்றும் கற்பிட்டி கடற்றொழில் பரிசோதகர் டி.ஆர்.யி.என் சமன் புஸ்பகுமார ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கற்பிட்டியைச் சேர்ந்தவருக்கு சொந்தமான களஞ்சியசாலை அறை ஒன்றை வாடகைக்கு பெற்று அதில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 1870 கிலோ எடை கொண்ட  தடை செய்யப்பட்ட தங்குஸ் வலைகள் அடங்கிய 55 உறைகள் கைப்பற்றப்பட்டதுடன்  அதில் தங்கி இருந்த மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். 


இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் கடற்றொழில் காரியாலய பொறுப்பதிகாரியின் அறிக்கை பெறப்பட்டு கைது செய்யப்பட்வர் மற்றும் வலைகள் நீதிமன்றத்திற்கு சமர்பிங்ஙப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments

note