குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு புத்தளத்தில் அரிசி வழங்கல்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டம் கடந்த 21 ம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 27 இலட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டுங மாதங்களுக்கு மாதந்தம் பத்து கிலோ அரிசி வழங்கப்படும்.
பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் எவரையும் அரசாங்கம் கைவிடப்போவதில்லை. வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நன்மைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
இதன்படி புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் தலைமையில் இடம்பெற்றது. இதில் கிராம சேவையாளர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
No comments