புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்ற இரத்த தான முகாம்
(எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்)
தர்மசக்தி அமைப்பு, கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியன இணைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர மண்டபத்தில் இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த இரத்த தான முகாம் 25 ம் திகதி வியாழக்கிழமை காலை 09 மணி தொடக்கம் புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் வைத்தியசாலையின் வேண்டுகோளை ஏற்று இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
இந்த இரத்த தான முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் தர்மசக்தி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ருமைஸ் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
No comments