அக்குறணையைச் சேர்ந்த மியாத் என்ற இளைஞனைக் காணவில்லை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அக்குறணையைச் சேர்ந்த 24 வயதுடைய முஹம்மத் மியாத் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார்.
கடந்த (2023) ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி தொழில் ஒன்றைத் தேடி கொழும்பு சென்ற இவர், தற்போது எங்கிருக்கின்றார் என்பது பற்றி இதுவரை தெரியாதுள்ளதாக குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடைசியாக இவர் கொழும்பில் இருந்து 011 2121087 என்ற இலக்கத்தில் தனது வீட்டுக்குப் பேசியுள்ளார்.
கொழும்பிலிருந்து இன்னும் ஒரு மாதத்தில் வீட்டுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் தொடர்பாக எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இவர் பற்றி யாராவது தகவல் தெரிந்தால் 0777312421 என்ற தொலைபேசி இலக்கமான ஹல்மி அஹமத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு குடும்பத்தவர்கள் கேட்டுள்ளனர்.
No comments