Breaking News

புத்தளத்தில் "தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்" எனும் தொணிப்பொருளில் மக்கள் மேடை

 (எம்.யூ.எம்.சனூன்)

புத்தளம் மாவட்ட மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையே முக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கான "மக்கள் மேடை" வியாழக்கிழமை (18) காலை புத்தளம் மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


"தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்" என்பது இந்நிகழ்வின் தொணிப்பொருளாகும்.


மார்ச் 12 இயக்கத்தின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ருமைஸ் தலைமையில், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் (IRES) நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜனாயக்க அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் செயலாளர் முஹம்மது நௌபல், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கரவின் புத்தளம் தொகுதி இணைப்பாளர், சமய தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


அரசியல் பிரமுகர்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான உரைகளை தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.











No comments

note