புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் முதல் மாணவி சித்தி பாத்திமா காலமானார்.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் புதுப்பள்ளி மஹல்லா , காஸிம் லேனில் வசித்து வந்த புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் முதல் மாணவி சித்தி பாத்திமா தனது 85 ஆவது வயதில் வியாழன் (11) மாலை காலமானார்.
இவர் முன்னாள் தப்லீக் ஜமாஅத் புத்தளம் ஏரியா பொறுப்புதாரி காலம்சென்ற மர்ஹும் ஷாபி ஹாஜியாரின் மனைவியும் புத்தளத்தில் புகழ்பெற்ற முதலாளி குடும்பத்தைச் சேர்ந்த சீனாகானா என அழைக்கப்பட்ட ஹமீது ஹுசைன் மரைக்காரின் புதல்வியாவார்.
புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் உருவாக்கத்திலும் சித்தி பாத்திமாவின் தந்தை ஹமீது ஹுசைன் மரைக்காரின் பங்கு அளப்பரியது அன்று அவரினால் முதலாவது நிதி வழங்களுடன் புத்தளம் ஸாஹிரா கல்லூரி தொடங்குவதற்கான நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டு கல்லூரியின் முதல் மாணவர் பதிவு 1945. 02.12 ம் திகதி இடம்பெற்ற போது ஆண்கள், பெண்கள் என 44 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாகவும் அதில் பெண்கள் வரிசையில் முதல் மாணவியாக சித்தி பாத்திமா பதியப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற முன்னாள் புத்தளம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ சன்ஹீர் தெரிவித்துள்ளார்.
தந்தை சினாகானா ஹமீது ஹுசைன் மரைக்கார்
No comments