மதுரங்குளி - கனமூலை சுரிவயல் ஜும்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை!.
மதுரங்குளி - கனமூலை சுரிவயல் ஜும்ஆ மஸ்ஜித் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை இன்று (10) கனமூலை எம்.எஸ்.சேகுஅலாவுதீன் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கனமூலை சுரிவயல் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருநாள் தொழுகையை கனமூலை - மிஹ்ராஜ்புரம் ஜும்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் எம்.எஸ். றிஸாம் (உஸ்வி) நடாத்தியதுடன், ஜும்ஆ பிரசங்கத்தை கனமூலை சுரிவயல் ஜும்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ.எம். அன்பாஸ் (ஹிழ்ரி) நிகழ்த்தினார்.
இதன்போது ஏராளமான ஊர் மக்கள் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments