Breaking News

புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தொடர்ந்து ஹிஸ்புல் குர்ஆன் ஓதிய 34 மாணவச் செல்வங்களுக்கு பதக்கங்கள் அணிவித்து கௌரவிப்பு!.

 (எம்.யூ.எம்.சனூன்)

நோன்பின் 29 ம் தினத்தை முன்னிட்டு (08) புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜிதில் நடைபெற்ற தௌபா நிகழ்விலே ஸாலிஹீன் மஸ்ஜிதின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் அவர்களினால் "பாவமன்னிப்பின் சிறப்பு" என்ற தலையங்கத்தில் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.


28 நோன்பு வரை தொடராக 34 மாணவர்களால் ஹிஸ்புல் குர்ஆன் ஓதப்பட்டு முழு குர்ஆனும் அன்றைய தினம் தமாம் செய்யப்பட்டது.


தொடர்ந்து ஹிஸ்புல் குர்ஆன் ஓதிய 34 மாணவ செல்வங்களுக்கும் ஸாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டமை முன்மாதிரி மிக்க செயற்பாடாகும்.


ஹிஸ்புல் குர்ஆனுக்கு பொறுப்பாக இருந்த ஸாலிஹீன் மஸ்ஜிதின் பிரதம பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஜெய்ஸான் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டன.


ஆறு வருட காலமாக ஸாலிஹீன் மஸ்ஜிதில் முஅத்தினாக கடமையாற்றி வரும் லத்தீப் அவரின் பொறுப்புணர்வை பாராட்டியும் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டன.


ஹிஸ்புல் குர்ஆன் ஓதிய 34 மாணவ செல்வங்களுக்கும் பெருநாள் சந்தோஷமாக பணம் கொடுக்கப்பட்டன.







No comments

note