Breaking News

கடையாமோட்டை அர் - றஷீதிய்யா அரபுக் கல்லூரிக்கு 2024 ஆம் ஆண்டுக்கு புதிய மாணவர் அனுமதி கோரப்பட்டுள்ளது

புத்தளம் மாவட்டம், கடையாமோட்டைப் பிரதேசத்தில் 1996 ஆம் ஆண்டு தொடக்கம் இரு தசாப்தங்களையும் கடந்நு நூற்றுக்கும் அதிகமான ஹாபிழ், ஆலிம் பட்டதாரிகளை முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கி வெற்றிகரமாக நடைபெற்று வரும் எமது அர்-றஷீதிய்யா அரபுக் கல்லூரிக்கு 2024 ஆம் கல்வியாண்டிற்கான ஹிப்ழ் மற்றும் கிதாபு பிரிவுகளுக்கு கீழ் வரும் தகைமையுடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


எமது கல்லூரியில் பாடசாலை பாடத்திட்டத்திற்கமைய தரம் 06 தொடக்கம் (க.பொ.த) சாதாரண தரம் மற்றும் உயர் தரம் வரையிலான அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுவதுடன் அல்-ஆலிம் பகுதி1 மற்றும் இரண்டுக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.


சேரவிரும்பும் மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை 2024-04-23 மற்றும் 28ம் திகதி காலை 9.00 மணிக்கு கல்லூரியில் நடைபெறும், எனவே கலந்து கொள்ள விரும்புவோர் கீழ் குறிப்படப்படும் ஆவணங்களுடன் சமூகம் தருமாறு வேண்டிக் கொள்கிறோம்.

-> பிறப்புச் சான்றிதழ் பிரதி

-> வேறு தகைமைச் சான்றிதழ்கள்


ஹிப்ழ் பிரிவு


 •குர்ஆனை சரளமாக ஓதக் கூடியவராக இருத்தல்

 •எழுத வாசிக்க தெரிந்தவராக இருத்தல்

 •தமது வேலைகளை சுயமாக செய்யக் கூடியவராக இருத்தல்

 •தரம் 6க்கு மேல் படித்தவராகவும் 12வயது பூர்த்தியாகாதவராகவும் இருத்தல்


போதிக்கப்படும் கல்வி


●நான்கு வருட பாடத் திட்டம்

●அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்தல்

●தஜ்வீத் வகுப்புக்கள்

●6ஆம் வகுப்பு தொடக்கம் 8ஆம் வகுப்பு வரையான பாடசாலைக் கல்வி


ஷரீஆ பிரிவு


> குர்ஆனை சரளமாக ஓதக் கூடியவராக இருத்தல்

> எழுத வாசிக்க தெரிந்தவராக இருத்தல்

> தமது வேலைகளை சுயமாக செய்யக் கூடியவராக இருத்தல்

> தரம் 9ல்சித்தியடைந்தவராக, 17வயது பூர்த்தியாகாதவராக இருத்தல்.


போதிக்கப்படும் கல்வி


> ஏழு வருட மௌலவி கற்கை நெறி

> அல் ஆலிம் 1, 2 பரீட்சை

> க.பொ.த (சா.த) பரீட்சை (O/L)

> க.பொ.த (உ.த) பரீட்சை (A/L)

> கணினி தொழில்நுற்பக் கல்வி என்பவற்றுக்கு மாணவர்கள் தயார் படுத்தப்படுகின்றனர்.



தொடர்புகளுக்கு

அதிபர் - 0775353189

அர்-றஷீதிய்யா அரபுக் கல்லூரி




No comments

note