Breaking News

கற்பிட்டி பிரதேச செயலக மெய்வல்லுனர் போட்டி நிகழ்வு 2024

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

48 வது தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு அமைய கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சகல கிராமசேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த விளையாட்டு கழகங்களின் வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளும் 2024 ம் ஆண்டுக்கான கற்பிட்டி பிரதேச செயலக மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சிகள் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் கற்பிட்டி பிரதேச செயலாளர் ஜே.எம் சமில இந்தியக் ஜயசிங்க தலைமையில் நடைபெற்றது.


கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட 24 விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் என சகலரும் கலந்து கொண்டனர். இதன்படி  போட்டிகளில் சகல பிரிவுகளிலும் இருந்து முதலாம் இடங்களை பெறும் போட்டியாளர்கள் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதுடன் இன்றைய கற்பிட்டி மெய்வல்லுனர் போட்டி நிகழ்விற்கு கற்பிட்டி பிரதேச செயலாளரின் அழைப்பை ஏற்று புத்தளம் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அனுர ஜயசிங்க கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.






No comments

note