Breaking News

புத்தளம் காதி நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது - மே மாதம் 06 ம் திகதி வரை விளக்கமறியல்

(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட காதி நீதிபதியாக செயற்பட்டுவந்த  சிலாபத்தைச் சேர்ந்த எம்.ஆர்.எம் முஹம்மது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (23) கைது செய்யட்டு புத்தளம் மேல் நீதிமன்றத்தின் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து மே மாதம் 06 ம் திகதிவரை காதி நீதிபதியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


புத்தளத்தின் காதியார்  இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணாக பல்வேறு செயல்பாடுகளை சுட்டிக்காட்டி நீதிபதியின் நியமனம்  முதல் புத்தளம் பெரிய பள்ளிவாசல் , புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம்  நீதிச்சேவை ஆணைக்குழு  மற்றும் கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு என்பவற்றிற்கும் பல்வேறு தரப்புக்களிடம் இருந்து முறைப்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் கொழும்பு விசேட இலஞ் ஊழல் ஆணைக்குழுவினர் கடந்த மூன்று நாட்களாக கொழும்பிலிருந்து புத்தளம் வருகை தந்திருந்து மேற்படி காதி நீதிபதியின்  நடவடிக்கைகளை அவதானித்து வந்த நிலையில் விவாகரத்து சான்றிதழ் பெறுவதற்காக சிலரை 22 ம் திகதி வருகை தருமாறு அறிவிக்கப்பட்டு அந்த தினத்தை மாற்றி 23 ம் திகதி வருகை தரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இதன் போது சம்மந்நப்பட்ட நபரிடம் விவாகரத்து சான்றிதழ் வழங்குவதற்கு 5000/- பணம் இலஞ்சமாக பெற்றுக் கொண்டமைக்காக காதி நீதிபதி  கைது செய்யப்பட்டார்.


இவருக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் பல்வேறு முறைப்பாடுகளை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்  விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


காதியாருடைய காலம் நீடிக்கப்படாத நிலையில் இன்னும் ஒருவர் வரும் வரைக்கும் அதற்கான கோவைகளை சரி செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கின்ற பொழுதிலே பல்வேறு விவாக விவாகரத்து தொடர்பான விடயங்களை இவர் முன்னெடுத்திருந்தார்.







No comments

note