புத்தளம் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி
(எம்.யூ.எம்.சனூன்)
புத்தளம் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் (07) அதிபர் திருமதி பரீதா முஸம்மில் தலைமையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கல்பிட்டி கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஆர்.டீ. பர்ணாந்து, புத்தளம் வலய கல்வி பணிமனையின் பிரதி கல்விப்பணிப்பாளர் காந்தி லதா, பள்ளிவாசல்துறை ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம். நஜுப்தீன், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், படை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அரபா, சபா, மினா ஆகிய மூன்று இல்லங்களும் கடுமையாக போட்டியிட்டு அரபா இல்லம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
No comments