புத்தளம் தில்லையடி அல்ஜித்தா பாலத்தின் வேலைகள் முடிவடையும் தருவாயில்
(கற்பிட்டி சியாஜ்)
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் முன்மொழிவுக்கமைய கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அல்ஜித்தா பாலத்தின் புணர்நிர்மானம்
உலகில் திடீரென ஏற்பட்ட கொரோனா முடக்கம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பாலத்தின் வேலைகள் தாமதமடைந்தது.
இருப்பினும் தொடர்ச்சியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மீண்டும் இந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தற்போது மேற்படி பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதை நேரில் சென்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பார்வையிட்டார் இதன்போது முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் நகுலேஸ்வரன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் இணைப்பாளர்களான எச். அமீர் அலி ஆசிரியர் மற்றும் நிஷாத் ஆகியோரும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments