வறுமையின் காரணமாக எவரும் பசியினால் வாடக்கூடாது. புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித் அதிரடி தீர்மானம்.
(எம்.யூ.எம்.சனூன்)
புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நோன்பு காலத்தில் மாத்திரம் அல்லாமல் எல்லா காலங்களிலும் ஸாலிஹீன் பள்ளி பிரதேச வாசிகள் எவரும் வறுமையின் காரணமாக உணவு உட்கொள்ளாமல் இருக்க கூடாது என்ற மிகப் பெரிய நல்ல நோக்கத்துடன் அத்தியாவசிய பொருட்களை எந்த நேரத்திலும் இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய உதவிகளை புத்தளம் நகரின் ஏனைய பள்ளிவாசல் பிரதேச வாசிகளும் அந்தந்த பள்ளிவாசல் நிர்வாகத்தின் உறுதிப்படுத்தலுடன் பெற்றுக்கொள்ள முடியும்.
ஸாலிஹீன் பள்ளியில் அரிசி 01 கிலோ, மாவு 01கிலோ, சீனி 500 கிராம், பருப்பு 250 கிராம், சோயா பக்கட், தேயிலை 50 கிராம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
வறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கஷ்டமான குடும்பங்கள் ஸாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.(ரகசியம் பாதுகாக்கப்படும்)
ஒரு ஏழை குடும்பத்தின் கஷ்டத்தை நீக்க வேண்டும் அல்லது ஒரு வறிய குடும்பத்திற்கு உணவளிக்க வேண்டும் என்று யாராவது விரும்பினால் புத்தளம் ஸாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகத்தின் தலைவர் மெளலவி ஜிப்னாஸ் அவர்களை 0755051051 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போது விரும்பினால் 01 கிலோ அரிசி, 01 கிலோ மாவு, 500 கிராம் சீனி, 250 கிராம் பருப்பு, 01 பக்கட் சோயா அல்லது 50 கிராம் தேயிலை வாங்கி மஸ்ஜிதுக்கு வழங்குவதன் மூலமும் உதவி செய்ய முடியும்.
No comments