அழைப்பு விடுக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டத்திற்கு அதிபரும் உறுப்பினர்களும் வரவில்லை - ற்பிட்டி அல் அக்ஸா வில் சம்பவம்
(கற்பிட்டி - சியாஜ்)
கற்பிட்டி அல் அக்ஸா அதிபர் முஸ்தபா அன்சார் இனால் அழைப்பு விடூக்கப்பட்ட இன்றைய (25) பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டத்திற்கு பெற்றோர்கள் இன்று பாடசாலையில் ஒன்று கூடினர் எனினும் பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலையின்ப அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை பல மணிநேரம் காத்திருந்த பெற்றோர்கள் தமது ஆதங்கத்தையும் கவலையையும் தெரிவித்ததுடன் அதிபரின் இச் செயலை வண்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தனர்
இன்றைய பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டம் எவ்வித அறிவிப்பும் இன்றி கைவிடப்பட்டதை சுட்டிக் காட்டி கூட்டத்திற்கு சமூகம் அளித்த பெற்றோர்களால் அதிபரின் இச் செயற்பாட்டை சுட்டிக் காட்டி கற்பிட்டி கோட்ட கல்விப் பணிப்பாளர் , புத்தளம் வலயக் கல்வி பணிப்பாளர் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் ஆகியோருக்கு நேரடியாக மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
No comments